திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கி சூட்டிற்கு தடை

Written by vinni   // October 10, 2013   //

Gun-Shot-Bulletபிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் துப்பாக்கியை பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடுவது வழக்கம்.

இதுபோன்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கியால் ஒரு நபர் சுட்டதில், மற்றொருவருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுதொடர்பாக பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. டெல்லி உயர் நீதிமன்றமும் இந்த தண்டனையை உறுதி செய்தது.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பிரபலங்களின் திருமணங்கள், சமூக நிகழ்ச்சிகளில் துப்பாக்கியை எடுத்து சென்று சகட்டு மேனிக்கு வானத்தை நோக்கி சுட்டு கொண்டாடுகின்றனர்.

துப்பாக்கியை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டியது மிக அவசியம் எனவே குற்றம்சாட்டப்பட்ட நபர் உள்நோக்கத்துடன் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை. இதனால் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை 7 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.