விரைவில் இந்தியாவிற்கு வரும் 3 சீரிஸ், ஜி.டி கார்கள்

Written by vinni   // October 10, 2013   //

pmw_002ஆடம்பர கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பி.எம்.டபள்யூ நிறுவனம் 2014ம் ஆண்டுக்குள் பி.எம்.டபள்யூ 3 சீரிஸ், ஜி.டி. ரக கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இப்புதிய கார்கள் மெசிடஸ், பென்ஸ் ரக கார்களையே மிஞ்சும் வகையில் இருக்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக சென்னையில் உள்ள இந்நிறுவன தொழிற்சாலையில் ரூ.210 கோடி முதலீடு செய்து விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ளப்படுவதாக பி.எம்.டபள்யூ நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் இதன் மூலம் ஆண்டுக்கு 14,000 கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.