அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக‌ வட‌ மாகாணசபை கவனத்தில் எடுக்க வேண்டும்

Written by vinni   // October 10, 2013   //

thampiகுற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலையுள்ளிட்ட விடயங்களை கூட்டமைப்பின் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் மற்றும் மாகாணசபை அங்கத்தவர்கள் கவனத்தினில் எடுத்து பாடுபடவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் கூட்டமைப்பை சேர்ந்த தம்பிராசா.கடந்த ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தம்பிராசாவின் பாத யாத்திரை நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் நேற்று புதன்கிழமை மாலை நிறைவடைந்தது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட முத்தையாப்பிள்ளை தம்பிராசா எட்டு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து கடந்த 5ம் திகதி சனிக்கிழமை முதல் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பாத யாத்திரையினை ஆரம்பித்திருந்தார்.

யாழ். நகருக்குள் நேற்று பிரவேசித்த தம்பிராசா, தனது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மஹிந்தவுக்கு வழங்குவதற்காக யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் ரூபினி வரதலிங்கத்தின் ஊடாக கையளித்திருந்தார்.அத்துடன் இந்திய பிரதமர் மற்றும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளிற்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார். நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு சார்பினில் போட்டியிட்டிருந்த தம்பிராசா தோல்வியை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.