சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை மகிழ்ச்சியளிப்பதாக இல்லை : பிரச்சினைகளை எழுப்புவதற்காகவே சிறிலங்கா செல்கிறேன் – பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன்

Written by vinni   // October 10, 2013   //

david-cameron-inter_791872cமனிதஉரிமைப் பிரச்சினைகளை எழுப்புவதற்காகவே சிறிலங்காவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் தாம் பங்கேற்கவுள்ளதாக, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

“கொழும்பில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று மனிதஉரிமை அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள போதிலும், நான் அந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளேன்.

ஏனென்றால், அப்போது தான், அந்தப் பிரச்சினைகளை எழுப்ப முடியும்.

கொமன்வெல்த் மாநாட்டில், சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்த கவலைகளை நிச்சயம் எழுப்புவேன்.

பிரித்தானியப் பிரதமர் கொமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்வது சரியானதே என்று நான் நினைக்கிறேன்.

ஏனென்றால் நாம் கொமன்வெல்த் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள்.

சிக்கலான பிரச்சினைகளை எழுப்புவதற்கு பிரித்தானியா ஒரு போதும் பின்வாங்காது.

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்த எமது நிலை தெளிவானது. அதிலிருந்து பின்வாங்க முடியாது. ஏனென்றால் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை மகிழ்ச்சியளிப்பதாக இல்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.