மலிவு விலையில் கிடைக்கும் கோழிக்கறி

Written by vinni   // October 9, 2013   //

karikoli_001புரட்டாசி எதிரொலியாகவும், கேரளாவில் பிளாட் ரேட் அடிப்படையில் கோழிக்கு வரி விதிக்கப்படுவதாலும் கோழிக்கறி விற்பனை கடும் பாதிப்படைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை, விஜயமங்கலம், சென்னிமலை, திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலூர், உடுமலை, மடத்துக்குளம், நெகமம், அவிநாசி, பெருமாநல்லூர் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கில் பண்ணைகள் உள்ளன.

கோழிக்கறிக்கு பல்லடம் பிராய்லர் கோ ஆர்டினேஷன் கமிட்டி (பிசிசிசி) மூலம் பண்ணை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

3 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.55க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2 தினங்களுக்கு முன்பு ரூ.45 ஆக விலை சரிவடைந்தது.

இந்நிலையில் நேற்று கிலோவுக்கு ரூ.5 வீதம் உயர்ந்து ரூ.50க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

கோழிக்கறியின் விலை வீழ்ச்சிக்கான காரணம் குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அனுப்பப்படும் கோழிக்கறிக்கு கிலோ ரூ.95 வீதம் பிளாட் ரேட் நிர்ணயம் செய்யப்பட்டதுடன், 14.5 சதவீத நுழைவு வரியும் விதிப்பதால் கேரளாவிற்கு கோழிக்கறி அனுப்பி வைப்பது வெகுவாக குறைந்துவிட்டது.

முன்பு நாள் ஒன்றுக்கு 4 லட்சம் கிலோ கோழிக்கறிகள் சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது 2 லட்சத்துக்கும் குறைவான கோழிக்கறிகளே கேரளாவிற்கு செல்கிறது.

இதனால் உள்ளூர் சந்தையை நம்பியே கோழிக்கறிகளை விற்பனை செய்ய வேண்டி உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.