தந்தை செல்வாக்கு அஞ்சலி செலுத்திய பின் சத்தியப்பிரமாணம்

Written by vinni   // October 9, 2013   //

thanthai selvaதந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் வடமாகாண சபை அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்கள்’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

வடமாகாண சபை அமைச்சர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு தந்தை செல்வா சதுக்கத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறுமென அவர் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் அமைச்சர்கள் தெரிவு இதுவரையில் வெளியிடப்படாதது தொடர்பாக கேட்டபோது, அமைச்சர்கள் தெரிவு இன்று வியாழக்கிழமை நிறைவு பெறாவிட்டால், நாளை வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாண நிகழ்வின் போது அமைச்சர்களின் பெயர்கள் அறிவிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.


Similar posts

Comments are closed.