6 நிமிடத்தில் 180 கோடிக்கு ஏலம் போன “வெள்ளை வைரம்”

Written by vinni   // October 9, 2013   //

diamond_002ஹாங்காக்கில் அரிய வகை வெள்ளை வைரம் ஒன்று ஆறே நிமிடத்தில் சுமார் 180 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
பிரபல ஏல நிறுவனமான சோத்பை இந்த முட்டை வடிவ வைரத்தை ஏலம் விடப் போவதாக அறிவித்தது.

இதனை தொடர்ந்து தொலைபேசி மூலம் ஏலத்தில் பங்கெடுத்த ஆப்பிரிக்காவை சேர்ந்த இருவர் இந்த வைரத்தை தனதாக்கிக்கொள்ள போட்டியிட்டார்கள்.

முடிவில் வெறும் ஆறே நிமிடத்தில் ஏலத்தொகை 19 ஆயிரம் பவுண்ட் என முடிவு செய்யப்பட்டது.

இந்திய ரூபாயின் மதிப்பில் அது சுமார் 189 கோடியே 96 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயாகும்.

சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்ட போது 299 கேரட் எடை கொண்டதாக இருந்த இந்த வைரத்தின் தற்போதைய எடை 118.28 கேரட் ஆகும்.

மேலும் நீல நிறத்தில் வட்ட வடிவில் ஏலத்திற்கு விடப்பட்டிருந்த மற்றொரு 7.6 கேரட் அரிய வைரம், அதற்குரிய விலைக்கு ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.