புத்தம் புது பொலிவுடன் உலகின் மிகப் பழமையான சினிமா தியேட்டர்

Written by vinni   // October 9, 2013   //

edan_theatre_002உலகிலேயே மிகப் பழமையான சினிமா தியேட்டர் மீண்டும் திறக்கப்படுகிறது.
பிரான்சின் துறைமுக நகரமான மார்செய்லின் அருகே லா சியோடட் என்ற ஊரில் உலகின் மிகப் பழமையான ஈடன் தியேட்டர் உள்ளது.

இங்கு கடந்த 1899ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் திகதி திரையுலகின் முன்னோடி எனக் கருதப்படும் லூமிரே சகோதரர்களான ஆகஸ்ட் மற்றும் லூயி தங்களின் திரைப்படத்தை வெளியிட்டார்கள்.

இதனை அப்போது 250 ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தார்கள்.

அதன்பின்னர் இங்கு பிரபல நடிகர்களின் திரை நாடகங்களும், திரைப்படங்களும் வெளியிடப்பட்டன.

ஆனால், கடந்த 1980களில் நடைபெற்ற திருட்டு சம்பவம் ஒன்றில் திரையரங்கின் உரிமையாளர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு திரையிடப்பட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

அதன்பின்னர் ஒவ்வொரு வருடமும் திரைப்பட விழாவில் பிரெஞ்சு மொழித் திரைப்படங்கள் திரையிடப்படும் ஒரு வாரம் மட்டும் இந்தத் திரையரங்கு செயல்பட்டு வந்தது.

அதன்பின்னர் கடந்த 1995 ஆம் ஆண்டில் இந்தத் திரையரங்கு மூடப்பட்டது.

தற்போது சீரமைக்கப்பட்டுள்ள இந்த ஈடன் தியேட்டர் இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.

தரையில் இருந்த பழைய விரிப்புகளுக்குப் பதிலாக ஓக் மரத்தினாலான தளங்கள், தூசி நிறைந்த நாற்காலிகளுக்குப் பதிலாக வெல்வெட்டினால் ஆன இருக்கைகள், மொசைக் டைல்களுடன் கூடிய புதிய மஞ்சள் நிற சுவர்பூச்சுகளுடன் இப்போது அந்தத் தியேட்டர் கம்பீரமாகக் காணப்படுகின்றது.

இந் நிகழ்ச்சியில் நடிகைகள் ஜூலியட் பினோச், நத்தாலி பே மற்றும் திரைப்பட இயக்குநர் ரோமன் போலன்ஸ்கி போன்றோர் பங்கேற்கின்றனர்.

 


Similar posts

Comments are closed.