பொலிசாரை ஆபாசமாக திட்டிய நடிகை கைது

Written by vinni   // October 9, 2013   //

anjum_nayar_002பொலிசாரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய குற்றத்திற்காக நடிகை அஞ்சும் நாயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மராட்டிய மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான அந்தேரி பகுதியில் உள்ள 20 மாடி குடியிருப்பில் இவர் வசித்து வருகிறார்.

அஞ்சும் நாயர் மாடலாக அறிமுகமாகி தற்போது நடிகையாகியுள்ளார். இவர் தனது வீட்டில் அதிக சத்தத்துடன் பாட்டு போட்டு ஆட்டம் ஆடியுள்ளார்.

இந்த தொல்லை தாங்காமல் அங்கு வசித்த மற்ற குடியிருப்பு வாசிகள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று நடிகை அஞ்சுவிடம் சத்தத்தை குறைக்க கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆனால் அதனை மறுத்த நடிகை அஞ்சு பொலிசை ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளை செய்துள்ளார். உடனே பெண் பொலிசார் வரவழைக்கப்பட்டு அஞ்சு நாயரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அஞ்சும் நாயர் அந்தேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


Similar posts

Comments are closed.