கனடிய பாராளுமன்ற உறுப்பினர் குழுவுடன் தமிழர்களின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு ஏற்பாடு

Written by vinni   // October 9, 2013   //

chrv2-450x300பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் எடுக்கவிருக்கும் நிலைப்பாடு தொடர்பாகவும், அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்ததுமான கருத்துப் பகிர்வினை கனடிய மனிதவுரிமை மையம் ஒக்டோபர் மாதம் 3ம் திகதி வியாழக்கிழமையன்று ரொறன்ரோ டெல்ரா கொட்டேலில் நடத்தியிருந்தது.

பிரதமர் இந்தோனேசியாவில் வைத்து தனது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு மூன்று தினங்களிற்கு முன்னதாக அனுமாணிப்பின் பிரகாரம் இடம்பெற்ற இந்தக் கலந்தாலோசனையில் மூத்த பத்திரிகையாளரா திரு.பீற்றர் சில்வமன் அவர்கள்,

கனடியப் பிரதமர் பொதுநலவாய மாநாடு தொடர்பாக எடுக்கும் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக கலந்து கொண்ட முக்கியஸ்தர்களின் கருத்தை ஏற்றதோடு, கனடியத் தேசிய ஊடகங்கள் பிரதமர் இந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை பகிஸ்கரிப்பதற்காக நிலைப்பாட்டையெடுத்த காரணத்தில் இந்த ஆண்டு இடம்பெறவுள்ள மாநாட்டிற்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கும் என்றும்,

எனவே கனடிய மனிதவுரிமை மையம் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளின் பொறுப்பாசிரியர்கள் மற்றும் அங்கு செல்லவுள்ள நிருபர்களுடனான சந்திப்பிற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்ய வேண்டும் என்றும் அவர்களிற்கு கையளிப்பதற்கான ஆவணங்கள், விளக்கக் குறிப்புக்கள் என்பவற்றை கனடிய மனிதவுரிமை மையம் விரைவில் தயாரித்து அடுத்த இரண்டு வாரங்களிற்குள் இச் சந்திப்புக்களிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

இதனை ஆமோதித்துக் கருத்துக் கூறிய கனடிய மனிதவுரிமை மையத்தின் முக்கியஸ்தர் ரொட் றொஸ் கனடியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டிற்குச் செல்வதா இல்லையா என்பது குறித்த கருத்துக் கணிப்பை, ஆளும்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளிற்கிணங்க கனடிய மனிதவுரிமை மையமே செய்திருந்தது என்பதை நினைவு படுத்தியதுடன்,

 கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு செல்லும் குழுவுடன் கனடியத் தமிழர்களின் முக்கியஸ்தர்கள் சந்திப்பதற்காக வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பது சிறந்ததொரு வழியென்றும் தெரிவித்தார்.

இக் கருத்தை ஆமோதித்த கனடிய மனிதவுரிமை மையத்தின் தலைவர் திரு.பாபு நாகலிங்கம் அவர்கள் கொழும்பு செல்லவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் குழுவுடனான தமிழர்களின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பை வெகுவிரைவில் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.


Similar posts

Comments are closed.