கனடா போன்று இந்தியாவும் கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் – ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ.

Written by vinni   // October 9, 2013   //

sarath-kumar-defends-land-dealஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் இந்த உலகமே அறிந்தது. அப்பாவி மக்களை மேலும் தம் சொந்த நாட்டு மக்களை போர் என்ற பெயரில் லட்சக்கணக்கில் கொன்று குவித்தது ராஜபக்சே அரசு. இதை உணர்ந்த அனைத்து நாடுகளும் இலங்கையைக் கண்டித்து வரும் நிலையில் இந்தியா மட்டும் உறவை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளார். தமிழர்கள் மீது அக்கறை கொண்டு இந்தியா காமன்வெல்த் மாநாட்டு புறக்கணிப்பு முடிவை எடுப்பது, அங்கே வாழும் தமிழர்கள் மீது மேலும் கவனத்தையும், பாதுகாப்பையும் அதிகரிக்கும் என்பது உறுதி. எனவே, மத்திய அரசு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க முன்வர வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.