இலங்கை அரசாங்க தலைமைக்கு கடுமையான செய்தியை பிரித்தானிய பிரதமர் எடுத்து செல்வார்

Written by vinni   // October 9, 2013   //

download (5)எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக இலங்கை வரும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன் கடுமையான செய்தி ஒன்றை இலங்கை அரசாங்க தலைமைக்கு செல்லவுள்ளார்.

பிரித்தானிய டைம்ஸ் செய்திதாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கொழும்பு மாநாட்டில் தாம பங்கேற்க போவதில்லை என்று கனடா அறிவித்துள்ள நிலையில், பிரித்தானிய தாம் மாநாட்டில் பங்கேற்பதற்குரிய நியாயத்தை கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே இலங்கை அரசாங்க தலைமைக்கு கடுமையான செய்தியை அந்த நாட்டின் பிரதமர் எடுத்துச் செல்வார் என்று பிரித்தானிய அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்த வேண்டும் என்று நான்கு வருடங்களுக்கு முன்னர், முடிவு எடுக்கப்பட்டது.

இந்தநிலையில் பொதுநலவாய அமைப்புக்கு தமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டியுள்ளமையால் பிரித்தானியா, இலங்கை மாநாட்டில் பங்கேற்க வேண்டியுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநாட்டில் பிரித்தானிய பிரதமர், இளவரசர் சார்ள்ஸ் உட்பட்ட 53 பேரைக்கொண்ட குழுவினர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.