தெண்டுல்கரும், ராகுல் டிராவிட் இருவருமே எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் :எனது சிறந்த மாணவர்கள் – கவாஸ்கர்

Written by vinni   // October 8, 2013   //

bdeecce0-afe0-48a8-9e42-28e9e6883d87_S_secvpfகிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றனர்.

இந்த இருவரையும் இனி கலர் சீருடையில் பார்க்க இயலாது. தெண்டுல்கர் டெஸ்டில் விளையாடுவதால் வெள்ளை சீருடையில் காண முடியும். ஆனால் டிராவிட் அனைத்து தர போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதால் அவரது ஆட்டத்தை இனி பார்க்க இயலாது.

இந்த இருவரில் யார் சிறந்தவர் என்பதை தேர்வு செய்வது சாத்தியமில்லாத ஒன்று என்றும், இருவரும் எனது சிறந்த மாணவர்கள் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

தெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்கு மகத்தானவை. சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இந்தியாவை தலை நிமிர வைத்துள்ளனர். இந்த இருவரில் யார் சிறந்த வீரர் என்பதை தேர்வு செய்வது இயலாத ஒன்றாகும்.

இருவருமே எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள். வலது கை, இடது கை போன்றவர்கள். இருவரையும் பிரித்து பார்க்க இயலாது.

ராகுல் டிராவிட் 3–வது வீரராகவும், தெண்டுல்கர் 4–வது வீரராகவும் இந்திய அணிக்காக பலமுறை களம் இறங்கியிருக்கிறார்கள்.

ஒருவரோடு மற்றொரு வரை விட்டுக்கொடுக்க முடியாத அற்புதத்தை இருவரும் படைத்துள்ளனர்.

குறிப்பாக டிராவிட்டின் கேப்டன் திறமை அற்புதமானது. ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் கேப்டன் என்ற முறையில் அவர் சிறப்பான முறையில் பிரச்சினையை கையாண்டார். அதனால் ராஜஸ்தான் அணி ஐ.பி.எல். மற்றும் சாம்பியன்ஸ் ‘லீக்’ போட்டியில் மிகுந்த முன்னேற்றம் கண்டது.

டிராவிட்டுக்கு சிறந்த கிரிக்கெட் நிர்வாகிக்குரிய திறமை இருக்கிறது.

இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.