ஜோதிடர்கள் சொன்னதால் இருப்பிடத்தை மாற்றிய‌ மம்தா பானர்ஜி

Written by vinni   // October 8, 2013   //

Mamata-Banerjee-மேற்கு வங்க முதல்–மந்திரி மம்தா பானர்ஜி தெற்கு கொல்கத்தாவில் உள்ள காளிகாட் என்ற பகுதியில் வசித்து வருகிறார்.

காளிகாட்டில் ஹரிஸ் சட்டர்ஜி தெருவில் உள்ள அந்த வீடு மம்தாவின் பூர்வீக வீடாகும். திருமணம் செய்து கொள்ளாத மம்தா, அந்த வீட்டில்தான் சகோதரருடன் கூட்டுக்கு குடும்பமாக வசித்து வருகிறார்.

புகழ்பெற்ற காளி கோவில் அருகில் இருக்கும் அந்த வீட்டில் இருந்து வேறு இடத்துக்கு செல்ல மம்தா விரும்பவில்லை. இதனால் முதல்–மந்திரி ஆன பிறகும் அவர் அந்த வீட்டிலேயே வசித்து வந்தார்.

இந்த நிலையில், மம்தாவை சந்தித்த ஜோதிடர் ஒருவர் ஹீக்ளி நதியின் மேற்கு பகுதிக்கு இடம் மாறினால் நல்லது நடக்கும் என்று கூறினாராம். இதைத் தொடர்ந்து ‘காளிகாட்’ல் இருந்து வெளியேற மம்தா முடிவு செய்துள்ளார்.

முதல்கட்டமாக அவர் ஹீக்ளி நதியை தாண்டி அவுராவில் மந்தீர்தலா என்ற இடத்தில் புதிய அலுவலகம் அமைத்துள்ளார். அங்கிருந்து அவர் தன் முதல்வர் பணிகளை செய்து வருகிறார்.

அடுத்த கட்டமாக அலிபூர் பகுதியில் உள்ள ஒரு பாரம்பரிய கட்டிடத்தில் குடியேற அவர் தீர்மானித்துள்ளார். தற்போது அந்த கட்டிடத்தில் கொல்கத்தா மாநகராட்சி கிளை அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, அங்கு மம்தாவுக்கு வீட்டை உருவாக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.


Similar posts

Comments are closed.