காமன்வெல்த் திட்டங்களுக்கு கனடா வழங்கியுள்ள ரூ.120 கோடியை திரும்ப பெறுவது குறித்து ஆலோசனை

Written by vinni   // October 8, 2013   //

canadaகாமன்வெல்த் மாநாட்டை நடத்தும் தகுதியை இலங்கை இழந்துவிட்டதாக கனடா தெரிவித்துள்ளது. இலங்கையில் இறுதிப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களை கருத்தில் கொண்டு, கொழும்புவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என கனடா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான அடக்குமுறைகள் உள்ளிட்டவைகளை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறினார். இச்சம்பவங்கள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

எனவே காமன்வெல்த் மாநாட்டை நடத்தும் தகுதியை இலங்கை இழந்துவிட்டதாகவும் அவர் கூறினார். மேலும், காமன்வெல்த் திட்டங்களுக்கு கனடா வழங்கியுள்ள ரூ.120 கோடியை திரும்ப பெறுவது குறித்தும் ஆலோசனை செய்து வருவதாகவும் ஹார்பர் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.