ஜனாதிபதி முன்னால் சத்தியப் பிரமாணம் செய்வது தமிழ் மக்களின் முதுகில் குத்தும் செயல் : ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கண்டனம்

Written by vinni   // October 8, 2013   //

vikneswaran_001தமிழ் மக்கள் விக்னேஸ்வரனுக்கு அமோக ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்தது, ஜனாதிபதி மஹிந்தவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேயன்றி, ஜனாதிபதியைக் காப்பாற்றுவதற்கு அல்ல என்றும், ஜனாதிபதி முன்னால் சத்தியப் பிரமாணம் செய்வது தமிழ் மக்களின் முதுகில் குத்தும் செயல் என்றும் கண்டித்துள்ள ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, பதவியேற்ற ஒக்ரோபர் 7 ஆம் திகதியைத் துக்க நாளாக அனுஷ்டிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.

 இது குறித்து அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாவது:
பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தும், தாய்க்குலத்தை மானபங்கப்படுத்திய மஹிந்த முன்பாக விக்னேஸ்வரன் சத்தியப்பிர மாணம் செய்வது ஜனாதிபதியை போர்க் குற்றங்களிலிருந்து தப்புவிக்கும் நடவடிக்கைகயே.
தமிழ் மக்கள் விக்னேஸ்வரனுக்கு அமோக ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்தது, ஜனாதிபதியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கே அதனை விடுத்து ஜனாதிபதியைக் காப்பாற்றுவதற்கு அல்ல.
ஜனாதிபதி முன்னால் சத்தியப் பிரமாணம் செய்வது தமிழ் மக்களின் முதுகில் குத்தும் செயல்.
நம்பி வாக்களித்த மக்களை நடு ஆற்றில் விடும் நடவடிக்கை. ஜனாதிபதி குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவோம் என்று மார்தட்டி வீரம் பேசிய விக்னேஸ்வரனின் வார்தையை நம்பியே தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள்.
தமிழ் மக்களின் தன்மானத்தை அடகு வைத்து, தமிழர்களை வெட்கித் தலைகுனிய வைப்பதற்குத் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. விக்னேஸ்வரன், போர்க் குற்றவாளியான மஹிந்த முன் தமிழர்களின் தன்மானத்தை அடகு வைத்து சத்தியப் பிரமாணம் செய்த நாளை தமிழ்மக்கள் துக்க நாளாகவே அனுஷ்டிக்க வேண்டும் என்றுள்ளது.


Similar posts

Comments are closed.