மூதாதையர்கள் ஆன்ம ஆசியின் பலத்தால் நெல்சன் மண்டேலா நன்றாக இருக்கிறார் -வின்னி மடிகிசேலா

Written by vinni   // October 8, 2013   //

Nelson+Mandela1தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர்  (வயது 95). இவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக பிரிட்டோரியா மருத்துவமனையில் கடந்த ஜூன் 8ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

3 மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் செப்டம்பர் 1-ம் தேதி வீடு திரும்பினார்.

கட்டிலில் படுத்தபடியே வீட்டில் ஓய்வெடுத்து வந்த மண்டேலா மெல்ல நடமாட தொடங்கி விட்டதாக அவரது பேரன் கடந்த மாதம் தெரிவித்தார்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க வானொலிக்கு பேட்டியளித்த அவரது முன்னாள் மனைவி வின்னி மடிகிசேலா, ‘அவர் நன்றாக இருக்கிறார். ஆப்பிரிக்க மக்கள், மண்டேலாவின் மூதாதையர்கள் ஆகியோரது ஆன்ம ஆசியின் பலத்தால் அவர் எப்போதும் நம்முடன் இருப்பார்’ என்று கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.