கொல்கத்தா நகரில் சைக்கிள் செல்ல தடை : மம்தா அரசுக்கு எதிராக வணிகர்கள் ஆவேசம்

Written by vinni   // October 8, 2013   //

11922.cycling-country2கொல்கத்தாவின் வாகன நெரிசலை குறைக்க நினைத்த மம்தா பானர்ஜி இயந்திரம் பொருத்தப்படாமல் மெதுவாக செல்லும் சைக்கிள், டிரை சைக்கிள் போன்ற வாகனங்கள் கொல்கத்தா நகரில் உள்ள சில சாலைகளில் செல்ல தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவால் பால்காரர்கள், பேப்பர் போடுபவர்கள், கொரியர் டெலிவரி ஊழியர்கள் என சைக்கிளை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் 38 சாலைகளில் சைக்கிள்கள் நுழைய அனுமதி இல்லை என அறிவித்த போலீசார் தற்போது அந்த எண்ணிக்கையை 4 மடங்கு ஆக்கி விட்டனர் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நாள்தோறும் சுமார் 2 1/2 லட்சம் லிட்டர் பால் 2 ஆயிரம் சைக்கிள் வியாபாரிகளால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது தடை செய்யப்பட்ட வழிகளில் பால் வியாபாரிகள் சைக்கிளில் செல்லும் போது மடக்கி பிடிக்கும் போலீசார் 110 ரூபாயை அபராதமாக விதித்து விடுவதால் மம்தா அரசின் இந்த முடிவை எதிர்த்து விரைவில் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜொராசான்கோ பால் மார்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.


Similar posts

Comments are closed.