மாலத்தீவில் வாக்குப்பதிவின் போது முறைகேடுகள் : மறுதேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Written by vinni   // October 8, 2013   //

Maldives voters elect leader after protests and violenceஇந்திய பெருங்கடல் நாடான மாலத்தீவில், மமூன் அப்துல் கயூம், 30 ஆண்டுகளாக அதிபராக இருந்து வந்தார். அதன்பிறகு, கடந்த 2008–ம் ஆண்டு பல கட்சிகள் பங்கேற்ற முதலாவது ஜனநாயக தேர்தல் நடைபெற்றது.

அதில், மாலத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் முகமது நஷீத் வெற்றி பெற்றார். ஆனால் 4 ஆண்டுகள் மட்டுமே பதவியில் நீடித்த அவர், ராணுவ புரட்சி காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி விலகினார். துணை அதிபராக இருந்த முகமது வகீத், அதிபர் ஆனார்.

இந்நிலையில், 2–வது ஜனநாயக தேர்தல் கடந்த செப்டம்பர் 7ம் தேதி நடைபெற்றது. இதில், தற்போதைய அதிபர் முகமது வகீத், முன்னாள் அதிபர் முகமது நஷீத், முன்னாள் அதிபர் கயூமின் சகோதரரும், மாலத்தீவு முற்போக்கு கட்சி வேட்பாளருமான அப்துல்லா யாமீன், ஜமூரி கட்சி வேட்பாளர் காசிம் இப்ராகிம் ஆகியோர் போட்டியிட்டனர்.

மாலத்தீவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். 192 தீவுகள், 40 ரிசார்ட்டுகள் ஆகியவற்றில் 470 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

2 ஆயிரத்து 229 உள்ளூர் பார்வையாளர்களும், 102 சர்வதேச பார்வையாளர்களும், ஆயிரத்து 342 அரசியல் கட்சி பிரதிநிதிகளும், சுமார் 2 ஆயிரம் உள்ளூர், சர்வதேச பத்திரிகையாளர்களும் இந்த தேர்தலை கண்காணித்தனர்.

இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் முஹம்மது நஷீத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வாக்குப்பதிவின் போது ஏகப்பட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டிய எதிர்கட்சிகள் மறுதேர்தல் நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நவம்பர் 3ம் தேதிக்குள் மறுதேர்தல் நடத்தவும் அக்டோபர் 20ம் தேதி முதல் சுற்று தேர்தலை நடத்தம் உத்தரவிட்டது.

இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் செல்லத்தக்கதல்ல எனவும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.


Similar posts

Comments are closed.