அர்த்தமுடைய அதிகார பகிர்வே எம்மால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது – சல்மான் குர்ஷித்

Written by vinni   // October 8, 2013   //

1978769143salman3வடமாகாண சபை தேர்தல் வெற்றிகரமாக முடிந்துள்ளதை பாராட்டிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் அர்த்தமுள்ள அதிகார பகிர்வை கொண்டுவருதற்காக பங்குதாரர் யாவருடனும் உள்ளக ஜனநாயக பேச்சுவார்த்தையை நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தமிழ் சமுதாயம் உட்பட இலங்கை பிரஜைகள் சமத்துவம் நீதி கௌரவம் மற்றும் சுயமரியாதை உள்ளிட்ட வாழ்வை அனுபவிப்பதை உறுதி செய்யும் நேரகாலத்துடனான அரசியல் தீர்வையே இந்தியா எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளதெனவும் அவர் கூறினார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சல்மான குர்ஷித் கொழும்பில் வைத்து எட்டு ஒப்பந்தங்களில் நேற்று திங்கட்கிழமை கைச்சாத்திட்டார். இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டதன் பின்னர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அர்த்தமுடைய அதிகார பகிர்வே எம்மால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அரசியல் தீர்விற்கான அதிகாரப் பகிர்வு திட்டமொன்றை வரைவதற்கான கால வரையறை எதனையும் இந்தியாவால் வலியுறுத்த முடியாது. இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு என்றும் அவர் கூறினார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஊடக மாநாட்டில் பேசும்போது அரசியலமைப்பு மாற்றங்கள் உடன்பாட்டினூடாக வரவேண்டும் நாடாளுமன்ற தெரிவுக்குழு இதற்காக செயற்படுகின்றது என அவர் கூறினார்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுலாக்கல்இ அதிலிருந்து மேலும் கட்டியெழுப்புதல் என்பவற்றின் அடிப்படையிலான அரசியல் தீர்வை நோக்கிய அதன் கடப்பாட்டை இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை பல தடவைகள் தெரிவித்துள்ளன.

பேச்சுவார்த்தை செயன்முறை தாமதமின்றி தொடங்குவதை நாம் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் எட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர். இதில் முக்கியமானதாக சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பான ஒப்பந்தம் அமைகின்றது. இத்திட்டம் 2016 இல் பூர்த்தியாகும் என குர்ஷித் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Similar posts

Comments are closed.