ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு : 45 பேர் பலி

Written by vinni   // October 8, 2013   //

M_Id_93279_iraq_bombingஈராக்கின் குர்தீஷ் இனமக்கள் வசிக்கும் பகுதியில் நேற்றிரவு நடந்த அடுக்கடுக்கான குண்டு வெடிப்பு சம்பவங்களில் 30 பேர் பலியாகினர்.

பப் அல் – ஷர்ஜி அருகே கார் குண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகினர். 11 பேர் படுகாயமடைந்தனர்.

ஹூசைனியா மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் அருகே மேலும் ஒரு கார் குண்டு வெடித்ததில் 6 பேர் பலியாகினர். 13 பேர் படுகாயமடைந்தனர்.

ஜப்ரானியா, அலம், ஒனபதி ஆகிய பகுதிகளிலும் கார் குண்டு வெடிப்பில் சிக்கி 8 பேர் பலியாகினர். 29 பேர் படுகாயமடைந்தனர்.

கம்சரா பகுதியில் சாலையோர குண்டு வெடிப்பில் 3 பேர் பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்தனர். அல்-ஜடிடா பகுதியிலும் சாலையோர குண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகினர். 17 பேர் படுகாயமடைந்தனர்.

டோரா மற்றும் சடையா ஆகிய பகுதிகளில் நடந்த கார் குண்டு வெடிப்பில் சிக்கி 7 பேர் பலியாகினர். 18 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு எல்லாம் தீவிரவாத இயக்கமான அல்-கொய்தா பொறுப்பேற்றுள்ளது.


Similar posts

Comments are closed.