பிரிமியர் லீக்: மான்செஸ்டர் சிட்டி வெற்றி

Written by vinni   // October 7, 2013   //

17-football-12-300எவர்டான் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி, எவர்டான் அணிகள் மோதின.

போட்டியின் முதல் பாதியில் எவர்டான் அணிக்கு ரூமேலு (16வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இதற்கு மான்செஸ்டர் சிட்டி அணியின் ஆல்வரோ (17) உடனடியாக பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அசத்திய சிட்டி அணிக்கு, செர்ஜியோ (45) ஒரு கோல் அடித்தார்.

பின் இரண்டாவது பாதியில் எவர்டான் அணியின் டிம் ஹாவர்டு (69) ஒரு “சேம்சைடு’ கோல் அடித்தார். இதன் பின் கடைசிவரை போராடிய இரு அணி வீரர்களாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

முடிவில், மான்செஸ்டர் சிட்டி அணி, 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி, சண்டர்லாந்து அணியை 2-1 என வீழ்த்தியது. ஆஸ்டன் வில்லா, ஹல் சிட்டி அணிகள் மோதிய மற்றொரு போட்டி கோல் எதுவுமின்றி “டிராவில்’ முடிந்தது. பிற போட்டிகளில் நியூகேசில் யுனைடெட் (2-1, எதிர்- கார்டிப் சிட்டி), புல்ஹாம் (1-0, ஸ்டோக் சிட்டி), லிவர்பூல் (3-1, கிறிஸ்டல் பேலஸ்) ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.


Similar posts

Comments are closed.