இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஹார்மிசன் ஓய்வு

Written by vinni   // October 7, 2013   //

Stephen-Harmison-300இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஹார்மிசன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த முடிவை அவர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
34 வயது நிரம்பிய ஹார்மிசன், இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 226 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 2004-ம் ஆண்டு 12 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். அன்றுமுதல், வேகப்பந்து வீச்சில் தனிமுத்திரை பதித்து வந்தார்.

9 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு விளையாடிய ஹார்மிசன், டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தையும் வகித்தது குறிப்பிடத்தக்கது


Similar posts

Comments are closed.