தெலுங்கானா எதிர்த்து வாலிபர் தீக்குளிப்பு : உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

Written by vinni   // October 7, 2013   //

news_11113சீமாந்திராவில் அனந்த்பூர் மாவட்டத்தில் இன்று போராட்டம் நடந்த போது மல்லிகார்ஜுன நாயக் என்ற வாலிபர் தற்கொலைக்கு முயன்றார். சென்னம்பள்ளி என்ற ஊரில் சாலை மறியலில் ஈடுபட்ட அவர் திடீரென தன் மீது மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

பலத்த தீ காயம் அடைந்த அனந்த்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 90 சதவீத தீ காயம் அடைந்த அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியது.

இதையடுத்து அவர் ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.