சிரியாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரசாயன ஆயுதங்களை அழிக்கும் பணி தொடங்கியது

Written by vinni   // October 7, 2013   //

li-620-chemical-weapons-cpசிரியாவில் அதிபர் பஷர்– அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 2½ ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள புரட்சிப்படை அரசிடம் இருந்து பல நகரங்களை தன் வசமாக்கியுள்ளது.

அதை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ராணுவம் டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் தடைசெய்யப்பட்ட ரசாயன (விஷ) குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதில் 250 குழந்தைகள் உள்பட 650–க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

அதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா பதிலடி கொடுக்க சிரியா மீது தாக்குதல் நடத்துவதாக அறிவித்தது. அதனால் போர் பதட்டம் ஏற்பட்டது. ரஷியாவின் தலையீட்டின் பேரில் ரசாயன ஆயுதங்களை ஒழிக்க சிரியா சம்மதித்தது. அதனால் போர் பதட்டம் நீங்கியது.

இந்த நிலையில் சிரியாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரசாயன ஆயுதங்களை அழிக்கும் பணி தொடங்கியது. அதற்கான பணியிலும் சர்வதேச நாடுகளின் ஆயுதம் ஒழிப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இக்குழு ஐ.நா.சபையால் உருவாக்கப்பட்டுள்ளது. ரசாயன குண்டுகள் தடை அமைப்பை சேர்ந்த இவர்கள் அந்த குண்டுகள் தயாரிக்கும் இடங்கள் மற்றும் பதுக்கி வைத்திருந்த இடங்களில் சோதனையிட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் அவற்றின் மீது கனரக வாகனங்களை ஏற்றி அழித்தனர். அவற்றில் ஏவுகணைகள், ரசாயன குண்டுகள் போன்றவை அடங்கும். இப்பணி இந்த வாரம் முழுவதும் நடைபெற உள்ளது.


Similar posts

Comments are closed.