அடுத்த தலைமைக்கு ராகுல் காந்திக்கு அழைப்பு : அந்த பதவியில் நீடிக்க இயலாது – பிரதமர் மன்மோகன்சிங்

Written by vinni   // October 7, 2013   //

pm-rahul-sl-2-2-2012குற்ற வழக்குகளில் 2 ஆண்டுக்கு மேல் ஜெயில் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த ஜூலை மாதம் 10–ந்தேதி அதிரடியாக தீர்ப்பை வெளியிட்டது.

கிரிமினல் அரசியல்வாதிகளை காப்பாற்றும் விதமாக மத்திய அரசு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்து அதை அவசர சட்டமாக அறிவித்தது.

இந்த அவசர சட்டம் முட்டாள்தனமானது என்று ராகுல் காந்தி தெரிவித்ததால் சர்ச்சை வெடித்தது. இதை தொடர்ந்து மத்திய அரசு அவசர சட்டத்தை வாபஸ் பெற்றது.

இந்த அவசர சட்டம் தொடர்பாக ராகுல் காந்தி கடந்த 2–ந்தேதி பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார்.

அப்போது ராகுல் காந்தியிடம் பிரதமர் பேசிய விவரம் தற்போது வெளியாகி உள்ளது. தீவிர அரசியலில் ஈடுபட்டு அடுத்த அரசு அமைக்க தலைமை தாங்க வாருங்கள் என்று ராகுல் காந்தியிடம் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தி இருக்கிறார்.

81 வயதான மன்மோகன் சிங் 3–வது முறையாக பிரதமர் பதவியை எற்க விரும்பவில்லை. அடுத்த பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் தன்னால் அந்த பதவியில் நீடிக்க இயலாது என்பதையும் ராகுல் காந்தியிடம் அவர் தெரிவித்து இருக்கிறார். இதனால்தான் ராகுலை தலைமை ஏற்க வருமாறு அவர் வலியுறுத்தி இருக்கிறார். ராகுல் காந்தி, தற்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கிறார்.


Similar posts

Comments are closed.