கூட்டமைப்பு அதிகாரத்துக்கு வந்துள்ளதால் ஏற்படும் விளைவுகளுக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பு – பொது பலசேனா

Written by vinni   // October 7, 2013   //

pothupalasena3501சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்பான பொது பலசேனா, சிறிலங்காவில் புனிதப்போரைத் தொடுக்கப் போவதாக எச்சரித்துள்ளது.

அனுராதபுரவில் செய்தியாளர்களிடம் பேசியபோதே, பொது பலசேனா அமைப்பின் தலைவர் கலகொடதத்தே, ஞானசார தேரர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியலில் ஈடுபடுத்த அனுமதித்த சிறிலங்கா அரசாங்கத்தையும் அவர் கடுமையாக கண்டித்துள்ளார்.

இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின், அரசியல் முன்னணியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று குறிப்பிட்டுள்ள, பொது பலசேனாவின் தலைவர், ஞானசார தேரர், வடக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்துக்கு வந்துள்ளதால் ஏற்படும் விளைவுகளுக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.