மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் : காணிப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கவேண்டும் – மாவை சேனாதிராஜா

Written by vinni   // October 7, 2013   //

mavai-senathirajaவட மகாணசபை காணிப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

போர் இடம்பெற்ற காலத்தில் பறிக்கப்பட்ட காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

போர் இடம்பெற்ற பிரதேசத்தை புனரமைக்குமாறு சர்வதேச சமூகம், இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.

மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு நேரடியாக பணத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதற்காக சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்.

மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இரண்டு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ள வகையில் அதிகாரப் பகிர்வுத் திர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது.

இலங்கை மீனவர்களிடம் பாரிய படகுகள் கிடையாது, இந்திய மீனவர்கள் பாரிய படகுகளைக் கொண்டு சில நாட்கள் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.

இரு நாடுகளினதும் அரசாங்கங்கள் மீனவர் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு; திட்டமொன்றை முன்வைக்க வேண்டும்.

இலங்கையின் தென் பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள சேனாதிராஜா, இந்திய ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.