ஆஸ்திரேலிய அணி இந்தியாவை தோற்கடித்து மீண்டும் ‘நம்பர் 1’ இடத்தை பிடிக்கும்

Written by vinni   // October 6, 2013   //

68f7c2bf-7f89-42dc-9890-a1665aa02425_S_secvpfஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஒரே ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் ஆட்டம் வருகிற 10–ந்தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது.

முதல் ஒருநாள் போட்டி 13–ந்தேதி புனேயில் நடக்கிறது. நவம்பர் 2–ந்தேதியுடன் ஒருநாள் தொடர் முடிகிறது.

காயம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவில்லை. பெய்லி கேப்டனாக பணியாற்றுகிறார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 5– 2 என்ற கணக்கில் தோற்கடித்து மீண்டும் ‘நம்பர் 1’ ம் இடத்தை பிடிக்கும் என்று துணை கேப்டன் பிரட் ஹாடின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:–

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் எங்களுக்கு மிகவும் எதிர்பார்ப்பான ஒன்றாகும். இந்திய ஆடு களங்களில் ஆடிய அனுபவம் எங்கள் அணி வீரர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இதனால் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

நாங்கள் 5–2 என்ற கணக்கில் வென்று மீண்டும் ‘நம்பர் 1’ இடத்தை பிடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. அதே நேரத்தில் இந்திய அணி அதன் சொந்த மைதானத்தில் எங்களை விட சிறப்பாக விளையாடக் கூடியது. அந்த அணி சாம்பியன்ஸ் டிராபியை சமீபத்தில் வென்று இருந்தது. ஆனாலும் இந்தியாவை வீழ்த்த நாங்கள் திட்டமிட்டு போராடுவோம்.

இவ்வாறு ஹாடின் கூறியுள்ளார்.

தற்போது ஒருநாள் தரவரிசையில் இந்திய 123 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 115 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும் உள்ளன.


Similar posts

Comments are closed.