சாம்பியன் கோப்பை யாருக்கு?

Written by vinni   // October 6, 2013   //

Rajasthan-Royals-vs-Mumbai-Indiansசாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது.

இதில் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்– ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் கோப்பையை வெல்ல கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இந்தப் போட்டி தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. எந்த ஒரு ஆட்டத்திலும் தோல்வியை தழுவவில்லை. சொந்த மண்ணான ஜெய்ப்பூரில் தொடர்ந்து வெற்றியை ருசித்து சாதனை நிகழ்த்திய அந்த அணிக்கு டெல்லி பெரோசா கோட்லா மைதானம் சவாலாக இருக்கலாம்.

ராஜஸ்தான் அணியில் கேப்டன் டிராவிட், ரகானே, வாட்சன், கெவின் கூப்பர், பால்க்னர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

ராகுல் டிராவிட் இந்தப்போட்டியோடு ஓய்வு பெறுகிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ஆடமாட்டேன் என்று ஏற்கனவே அறிவித்து விட்டார். இதனால் தனது கடைசி போட்டி சிறப்பாக அமைய அவர் பாடுபடுவார்.

அனைத்து ஆட்டத்திலும் வென்று இறுதிப்போட்டிக்கு நுழைந்து இருப்பதால் மும்பையை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் ராஜஸ்தான் அணி உள்ளது. மேலும் லீக் ஆட்டத்தில் மும்பையை வென்று இருந்ததால் கூடுதல் நம்பிக்கையில் அந்த அணி உள்ளது.

தொடக்கத்தில் தடுமாறி பின்னர் சுதாரித்து விளையாடி மும்பை இந்தியன்ஸ் இறுதிப்போட்டி வாய்ப்பை பெற்றது. அந்த அணியின் பேட்டிங் மிகவும் வலுவாக உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, வெய்ன்சுமித், போலார்ட், தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

டெல்லி மைதானத்தில் டிரினிடாட்டை அரை இறுதியில் வென்று இருந்ததால் அந்த அணி ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி 2–வது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இதற்கு முன்பு 2011–ம் ஆண்டு அந்த அணி கோப்பையை வென்று இருந்தது.


Similar posts

Comments are closed.