சல்மான் குர்ஷித் நாளை இலங்கை விஜயம்

Written by vinni   // October 6, 2013   //

1297502103salman-kurshid2இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நாளை (07) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இவர் இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது, சல்மான் குர்ஷித் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட அரச உயரதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸுடனான சல்மான் குர்ஷித்தின் சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, வடமாகாண ஆளுனர் ஐீ.ஏ.சந்திரசிறி மற்றும் வட மாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட கூட்டமைப்பு பிரதிநிதிகளையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திந்து கலந்துரையாடவுள்ளார்.


Similar posts

Comments are closed.