மகாத்மா காந்தி பயணம் செய்த ரயில் பெட்டி மாயமானது உண்மையா?

Written by vinni   // October 6, 2013   //

mahatma_001சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். ரயில்வே பெட்டி தொழிற்சாலை மக்கள் தொடர்பு அதிகாரி ஜி.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தென்னாபிரிக்காவில் காந்தி பயணம் செய்த ரயில் பெட்டி ஒன்று ஐ.சி.எப். வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது காணாமல் போய்விட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

இந்த செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி ஆகும். தென்னாபிரிக்காவில் காந்தி பயணம் செய்த ரயில் பெட்டி சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டது என்பதற்கு எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லை.

ஐ.சி.எப்.ல் உள்ள மண்டல ரயில் அருங்காட்சியகத்தில் பழமையான ரயில் பெட்டிகளும், பாரம்பரியமிக்க ரயில் என்ஜின்களும் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ரயில் என்ஜின்களும், ரயில் பெட்டிகளும் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என ஜி.சுப்பிரமணியன் கூறினார்.


Similar posts

Comments are closed.