இத்தாலி திரைப்பட இயக்குனர் தற்கொலை

Written by vinni   // October 6, 2013   //

carlo_lizzani_001மூன்றவாது மாடியில் இருந்து குதித்து, 91 வயது இத்தாலி திரைப்பட இயக்குனர் நேற்று சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
இத்தாலியின் பழம் பெரும் திரைப்பட இயக்குனர் கார்லோ லிஜ்ஜானி (91).

இவர் ரோமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்ற சனிக்கிழமை தனது வீட்டு பால்கனி வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

லிஜ்ஜானி, வெனிஸ் திரைப்பட விழா குழுவுக்கு 3 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார். 1948-ஆம் ஆண்டு இத்தாலி கம்யூனிஸ்ட் தலைவர் பால்மிரோ டொக்லியாட்டி பற்றி டாகுமெண்டரி படம் ஒன்றை இயக்கி, தனது திரையுலகப் பயணத்தை அவர் தொடங்கினார்.


Similar posts

Comments are closed.