சிறைச்சாலை கூரை மீது ஏறி சிறைக்கைதி போராட்டம்

Written by vinni   // October 6, 2013   //

batti_jail_001மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதியொருவர் இன்று காலை முதல் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் புதூரை சேர்ந்த அன்டனி ஜெயராஜ் என்பவே இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளார்.

இவரை பொலநறுவையில் உள்ள சிறைச்சாலைக்கு இடமாற்றுவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுவருவதாகவும் தன்னால் அங்கு செல்ல முடியாது என தெரிவித்தே அவர் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளிடம் வினவியபோது,

குறித்த கைதி தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர், ஏனைய கைதிகளுடன் அடிக்கடி முரண்படுவதுடன் ஏனைய சிறைக்கைதிகளை தாக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவரை பொலநறுவைக்கு இடமாற்ற தீர்மானித்ததாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த சிறைக்கைதி மீது மேல் நீதிமன்றம் மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் ஆகியவற்றில் இரு வழக்குகளும் உள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.


Similar posts

Comments are closed.