பரீட்சையில் தேர்ச்சியடையாத மகனுக்கு இரும்பு கம்பியால் சூடு வைத்த தந்தை கைது

Written by vinni   // October 6, 2013   //

prevention-of-child-abuse-welt-small-38879ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தேர்ச்சியடையாத 10 வயது மகனை, இரும்பு கம்பியை தீயில் வெம்பமூட்டி சூடு வைத்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் ஹட்டன் பொகவந்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீக்காயத்திற்கு உள்ளான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன், பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Similar posts

Comments are closed.