கேரளத்தின் மிக வயதான பெண்மணி மரணம்

Written by vinni   // October 6, 2013   //

dead_body_கேரளத்தின் மிக வயதான பெண்மணி மரணம் அடைந்தார். கேரள மாநிலம் பத்தணம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் புல்லாட்டு சின்னம்மு (115).
இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

அவருடைய கனவர், 35 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருக்கு பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்திகள் என மொத்த குடும்ப உறுப்பினர்கள் மட்டும் 140 பேர் உள்ளனர்.

கேரள மாநிலத்திலேயே “மிக அதிக வயதானவர்’ என்பதற்கான விருதை அந்த மாநில அரசு சார்பில் கடந்த செவ்வாய்க்கிழமை சின்னம்முவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.