ஜேர்மனியில் புதிதாக 160,000 வேலைவாய்ப்புகள்

Written by vinni   // October 5, 2013   //

guy_sleeping_workஅமெரிக்கா- ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 160,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக உள்ளது.

இதன் மூலம் ஜேர்மனியில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என பெர்டெல்ஸ்மேன் அறக்கட்டளை மற்றும் முனீச் இன்போ இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

மேலும் வர்த்தக செலவுகள் குறையும் என்றும், உணவு மற்றும் உலோக பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வது அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெர்டெல்ஸ்மேன் அறக்கட்டளையின் தலைவர் Aart De Geus கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெரிய நிறுவனங்களை போன்று நடுத்தர தொழில்களும் சிறப்படையும்.

கார் உற்பத்தி, பொறியியல் மற்றும் மின்னணு நிறுவனங்களில் மட்டும் 85,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

வர்த்தக செலவுகள் குறைவதால், சேவை துறை நன்மை அடையும், அத்துடன் 75000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.

2014ம் ஆண்டுக்குள் இவ்விரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்பப்படுகிறது.


Similar posts

Comments are closed.