கேரளாவில் பரபரப்பு அமைச்சர் வீடு அருகே குண்டு வெடித்தது

Written by vinni   // October 5, 2013   //

Bomb-Blast-330x185கேரளாவில் அமைச்சர் வீடு அருகே நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் காயமடைந்தனர். கேரளாவில் கண்ணூர் அருகேயுள்ள பானூர் பாறாடு பகுதியில் கேரள விவசாய அமைச்சர் மோகனன் வீடு உள்ளது. அங்கிருந்து 500 மீட்டர் தூரத்தில் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகம் உள்ளது. இதன் அருகே சிறிய மைதா னம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மைதானத்தில் குண்டு வெடித்தது. இதை கேட்ட அப்பகுதியினர் கட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் குண்டு வீசியிருக்கலாம் என கருதி விரைந்து சென்று பார்த்தனர்.
ஆனால், மைதானத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் கிடந்தனர். அவர்களை போலீ சார் மீட்டு மருத்துவமனை யில் சேர்த்தனர். காயம் அடைந்தவர்களில் 4 பேர் விவரம் தெரிய வந்தது. அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முகமது (19), ஜாசிம்(21), முனவீர் (19) மற்றும் அப்சல்(19). இவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவ இடத்திலிருந்து வெடிக்காத 10 ஸ்டீல் வெடிகுண்டுகளும், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களையும் போலீ சார் கைப்பற்றினர். வெடிகுண்டு தயாரிக்கும்போது தவறுதலாக வெடித்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அமைச்சர் மோகனனின் 2 மகள்களின் திருமணம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.

இதில் முதல்வர் உம்மன்சாண்டி, அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பினராய் விஜயன், சபாநாயகர் கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இந்நிலையில் அமைச் சர் வீடு அருகே குண்டு வெடிப்பு நடந்தது போலீசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கி பிரமுகர்களை குறிவைத்து வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும், கேரள இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்தது தொடர்பான வழக்கில் கொச்சி என்ஐஏ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதையொட்டி தாக்குதல் நடத்துவதற்காக வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் கூடுதல் எஸ்.பி. நாராயணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பானூர் போலீசார் விசாரிக்கின்றனர். குண்டு வெடிப்பு நடந்த இடத்தை அமைச்சர் மோகனன் பார்வையிட்டார்.


Similar posts

Comments are closed.