சிறுமி பலாத்காரம் வாலிபர் பிடிபட்டார்

Written by vinni   // October 5, 2013   //

rapeசிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நியூ அசோக் நகர் பிளாக் ‘பி‘ பகுதியை சேர்ந்த சிறுமி பாவ்னா (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சம்பவத்தன்று வெளியே சென்ற பாவ்னா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவளது பெற்றோர் அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பாவ்னாவை தேடி வந்தனர்.இந்நிலையில், பாவ்னாவை வாலிபர் ஒருவர் பாண்டவ் நகரில் உள்ள சசிகார்டன் பகுதிக்கு கடத்தி சென்றதாக நேற்று முன்தினம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சிறுமி பாவ்னாவை மீட்டனர். அவளை கடத்தி சென்ற வாலிபரை கைது செய்தனர். விசாரணையில், அந்த வாலிபர் பாவ்னாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த விகாஸ் (22) என்பதும், அவன் பாவ்னாவை பலமுறை பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Similar posts

Comments are closed.