விக்கினேஸ்வரன் கோத்தாவுடன் படை குறைப்பு பற்றி பேசினாராம் !

Written by vinni   // October 5, 2013   //

vikneswaran

வடக்கு மாகாணசபையின் பாதுகாப்பு தொடர்பினில் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாவை சந்தித்து பேசியுள்ளார்.எனினும் இதுவொரு நட்புறவு சந்திப்பேயென முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனின் ஆதரவாளர்கள் தரப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது வடக்கினில் படைக்குறைப்பு பற்றி பெரிதும் பேசியிருந்த சீ.வி.விக்கினேஸ்வரன் இன்;றைய தினம் இடம்பெற்ற கோத்தாவுடனான சந்திப்பினில் இதுபற்றி பேசியிருந்தாராவென்பது தெரியவில்லை.அவருடன் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற அங்கத்தவர் சுமந்திரனும் சென்றிருந்ததாக கூறப்பட்ட போதும் அதுவுறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

இதனிடையே முன்னதாக மஹிந்தவுடன் இடம்பெற்ற சந்திப்பிலும் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது.அவ்வேளை சுமந்திரனும் அங்கு பிரசன்னமாகியிருந்ததாகவும் மஹிந்த வழங்கிய ஆலோசனையினையடுத்தே கோத்தாவுடனான சந்திப்பு ஏற்பாடாகியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.கோத்தா தங்கள் தொடர்பினில் தப்பபிராயத்தை கொண்டிருப்பதாகவும் அதனால் நேரினில் சந்தித்து தெளிவுபடுத்துமாறு கோரப்பட்டதாகவும் தெரியவருகின்றது.எனினும் இவ்விடயம் பற்றி வாய் திறக்க கூட்டமைப்பு தலைமை மறுத்தே வருகின்றது.


Similar posts

Comments are closed.