இலங்கையை பூகம்பம் தாக்குவதற்கு வாய்ப்பு : பூமிக்கு அடியில் பாரிய வெடிப்பு

Written by vinni   // October 5, 2013   //

earthquake_graphic_051709_xlargeஇலங்கைகுரிய பூமி மண்டலப் பகுதியில் சுமார் 500 முதல் 600 கிலோ மீற்றர் தூரத்தில் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாக சிரேஷ்ட பூகோளவியல் பேராசிரியர் சீ.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

புவியியல் காரணங்களினால் ஏற்பட்டு வரும் இந்த மாற்றம் காரணமாக இலங்கை பூகம்பங்களுக்கு பலியாகும் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் அண்மையில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியை அடுத்து இந்த ஆபத்தான நிலைமை உருவாகியுள்ளது.
இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் புதிய புவி அடுக்கு உருவாகி வருவதால் பூமிக்குள் வெடிப்பு ஏற்பட்டு வருகிறது.
10 முதல் 12 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்த வெடிப்பு ஏற்பட ஆரம்பித்ததுடன் தற்போது அது உள்ளுக்குள் பாரிய வெடிப்பாக மாறி வருகிறது என்றார்.


Similar posts

Comments are closed.