மூன்று இலங்கை திரைப்படங்களை நேபாள அரசாங்கம் தடைசெய்தது!

Written by vinni   // October 4, 2013   //

war-crimes1நேபாளத்தில் நடைபெறும் தெற்காசிய திரைப்பட விழாவில் இலங்கையின் மூன்று ஆவணப்படங்களை திரையிடுவதற்கு நேபாள அரசாங்கம் தடைவிதித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய திரைப்பட விழாவில், புரோக்கன், தெ ஸ்டோரி ஒப் வன் மற்றும் நோ பயர் சோன் ஆகிய ஆவணப்படங்கள் திரையிடப்படவிருந்தன.

எனினும் நேபாள அரசாங்கத்திடம் இருந்து கிடைத்த உத்தரவை அடுத்து அந்த மூன்று படங்களையும் திரையிடுவதில்லை என்று தென்னாசிய திரைப்பட சம்மேளனம் அறிவித்துள்ளது.

எனினும் இதற்கான காரணங்களை நேபாள தகவல் அமைச்சு தென்னாசிய திரைப்பட சம்மேளனத்துக்கு அறிவிக்கவில்லை.

இந்தநிலையில் குறித்த மூன்று படங்களும் வேறு ஒரு இடத்தில் சனிக்கிழமையன்று காண்பிக்கப்படும் என்று கூறியுள்ள தென்னாசிய திரைப்பட சம்மேளனம், 2000 டொலர் வெற்றிப்பரிசின் போதும் இந்த படங்கள் கருத்திற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.

நேபாள அரசாங்கத்தின் இந்த செயல் சுதந்திரமான பேச்சுரிமைக்கு எதிரான செயல் என்றும் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

தெற்காசிய திரைப்பட விழா 2007 ஆம் ஆண்டு முதல் நேபாளத்தில் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தில் குறித்த விழாவுக்காக இந்தியாவில் 55 படங்கள் உட்பட்ட இலங்கை, பங்களாதேஸ், பர்மா, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து கிடைத்த 388 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இதேவேளை, இலங்கை அரசின் அழுத்தம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விழாவின் ஏற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எங்களுக்குத் தெரிந்தவரை 3 ஆவணப் படங்களைத் திரையிடக் கூடாது என்று இலங்கை அரசு, நேபாள அரசுக்கு தனது தூதரகம் மூலம் அழுத்தம் கொடுத்துள்ளது.

இதையடுத்து நேபாள அரசு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது என்றார் பிலிம் சவுத் எசியாவின் தலைவர் கனக் மணி தீக்ஷித்.

திரையரங்குகளில் இந்தப் படங்களை திரையிட முடியாவிட்டாலும், குறிப்பிட்ட சிலருக்கு இந்தப் படம் தனியாக போட்டுக் காட்டப்படும். இந்தப் படங்கள், சிறந்த ஆவணப் படங்களுக்கான போட்டியில் தொடர்ந்து இருக்கும் என்றும் தெற்காசிய ஆவணப்பட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்தி – இலங்கை தொடர்பான மூன்று விவரணப்படங்களை திரையிட வேண்டாம்!- அரசாங்கம் நேபாள அதிகாரிகளுக்கு அழுத்தம்


Similar posts

Comments are closed.