சென்னை அணியை புரட்டி எடுத்த பந்துவீச்சாளர்களுக்கு பாராட்டு

Written by vinni   // October 4, 2013   //

theசென்னை அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக டிரினிடாட் அணியின் அணித்தலைவர் தினேஷ் ராம்தின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டெல்லியின் நடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் டிரினிடாட் அண்டு டுபாகோ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வீழ்த்தியது.

இப்போட்டியில் பந்துவீச்சில் அசத்திய எம்ரித் 3, ரவி ராம்பால், சிம்மன்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதுகுறித்து அணியின் அணித்தலைவர் ராம்தின் கூறுகையில், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சாளர்கள் அசத்தினர்.

குறிப்பாக டோனிக்கு எதிராக சுழலில் அசத்திய சுனில் நரைன், ஓட்டங்கள் எடுப்பதை வெகுவாக தடுத்தார்.

துல்லியமாக பந்துவீசிய பந்துவீச்சாளர்கள், சென்னை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தினர்.

தவிர, சென்னை அணியின் தொடக்க வீரர் மைக்கேல் ஹசியை, ரவி ராம்பால் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க செய்தது சிறப்பம்சம்.

அரையிறுதியில் மும்பை அணியை எதிர்கொள்கிறோம். மும்பை அணியில் சச்சின் உள்ளிட்ட திறமையான வீரர்கள் நிறைய உள்ளனர்.

எங்கள் அணியில் உள்ள சுழற்பந்துவீச்சாளர்கள், மீண்டும் முழுத்திறமையை வெளிப்படுத்தி சாதிப்போம் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.