ஜனாதிபதி தேர்தலில் தீவிரவாதி போட்டி

Written by vinni   // October 4, 2013   //

abdul_rasoul_002ஆப்கானிஸ்தானில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தீவிரவாதி அப்துல்ரசூல் சய்யாப் போட்டியிடுகிறார்.
ஆப்கானிஸ்தானில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போது அதற்கான வேட்பாளர்களின் பெயர் பதிவுகள் நடைபெற்று வருகிறது. இதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை தான் கடைசி நாளாகும்.

இந்நிலையில் வேட்பாளராக தீவிரவாதி அப்துல்ரசூல் சய்யாப் தனது பெயரை பதிவு செய்து வைத்துள்ளார்.

இவர் கடந்த 1980 மற்றும் 1990-ம் அண்டுகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் முகாம்களை அமைத்து தீவிரவாதிகளுக்கு இராணுவ பயிற்சி அளித்து வந்தவர்.

மேலும், கடந்த 1996-ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவரான ஒசாமா பின்லேடனை சந்தித்து, சூடானில் தங்கியிருந்த அவரை ஆப்கானிஸ்தானுக்கு அழைத்து வந்தவர்.

இவர் மூலமே அல்கொய்தா தீவிரவாதி இயக்கம் ஆப்கானிஸ்தானில் வேரூன்றத் தொடங்கியது எனக் கூறலாம்.

அமெரிக்கா மீது அல்கொய்தா தீவிரவாத இயக்கம் நடத்திய சில தாக்குதல்கள் இவரது மூளையே காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அப்துல்ரசூல், தனது நாட்டிற்கு சேவை செய்வதற்காகவே தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.