இத்தாலியில் படகு விபத்து! 300 அகதிகள் பலி (வீடியோ இணைப்பு)

Written by vinni   // October 4, 2013   //

italy_boat_sink_003இத்தாலியில் கடலில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 300 பேர் பலியாகி உள்ளனர்.
ஆப்ரிக்க நாடான சோமாலியா மற்றும் எரிட்ரியா நாடுகளிலிருந்து ஏராளமானவர்கள் பிழைப்பு தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேறுகின்றனர்.

இந்நிலையில் இத்தாலியின் தெற்குப்பகுதியில் உள்ள லாம்பெடுசா கடல் பகுதியில் சட்டவிரோதமாக சென்று கொண்டிருந்தவர்களின் படகு விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த 500 பேரும் கடலுக்குள் மூழ்கி தத்தளித்தனர்.

தகவலறிந்து உடனடியாக விரைந்து சென்ற மீட்புப்படையினர், கடலில் மூழ்கியவர்களை காப்பாற்றி வருகின்றனர்.

இந்த விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர், 150 பேர் காப்பாற்றப்பட்டனர்.

இறந்தவர்களில் குழந்தைகள், கர்ப்பிணிகளும் இருந்தனர் என்று மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

பிழைப்பு தேடி அகதிகளாக சென்றவர்கள் கடலில் மூழ்கி பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Similar posts

Comments are closed.