அழகான குடும்பத்தை சிதைத்த தவறான மருத்துவம்!

Written by vinni   // October 4, 2013   //

wrong_medicine_family_002தமிழ்நாட்டில் ஒரு உயிரை சிதைத்து, அழகான குடும்பத்தையே சீரழித்துள்ளது கோவை மருத்துவமனையின் தவறான மருத்துவம்.
திருமதி ஸ்ரீமதி ராஜகுமார் (வயது22). இவர் கோவை மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்த திரு.சாரதா அவர்களிடம், தன்னுடைய பிரசவத்துக்கான சிகிச்சைகளையும் ஆலோசனைகளையும், திரு சாரதா அவர்கள் தனியாக சித்தாபுதூரில் நடத்தி வரும் கிளினிக்கில் பெற்று வந்தார்.

அவருடைய அறிவுறுத்தலின் பேரில் பிரசவத்துக்காக காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் இருக்கும் சக்தி நர்சிங் ஹோம் என்ற தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

கடந்த மாதம் 23 செப்டம்பர் அன்று மாலை 4:58க்கு சிசேரியன் மூலம் அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குடும்பமே மகிழ்ந்திருந்த வேளையில், அதற்குப் பிறகு நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடந்துள்ளன.

24 செப்டம்பர் 2013:

மதியம் 2:00 மணி: அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தைச் சுற்றிலும் தாள முடியாத வலி ஏற்படுவதாக ஸ்ரீமதி கூறினார். அப்போது அதைக் கவனிக்க எந்த மருத்துவரும் உடன் இல்லை.

மதியம் 2:10 மணி: அங்கு பணியில் இருந்த செவிலியர் , வலி நிவாரணி ஊசி ஒன்றை ஸ்ரீமதிக்கு செலுத்தினார். அந்த ஊசி செலுத்தப்பட்டவுடன் கடுமையான நெஞ்சுவலிக்கு உள்ளான ஸ்ரீமதி மயக்கமடைகிறார். (ரத்த அழுத்தம் ஏற்கெனவே குறைவாக/நிலையில்லாமல் இருந்த ஸ்ரீமதிக்கு அத்தகைய ஊசி செலுத்தப் பட்டிருக்கக் கூடாது)

மதியம் 2:15 மணி: சக்தி மருத்துவமனை நிர்வாகம் ஸ்ரீமதியை உடனடியாக கோவையில் உள்ள மற்றொரு பிரபல மருத்துவமனையான கே.ஜி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல கட்டாயப்படுத்துகிறது.

மதியம் 3:00 மணி: கே.ஜி மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் , ஸ்ரீமதிக்கு நாடித்துடிப்பு இருப்பதற்கான எந்தத் தடயமுமே இல்லை என்று சொல்லி விட்டு, உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கிறார்கள்.

மாலை 3:45 மணி: ஸ்ரீமதியின் கணவர் திரு ராஜ குமார் அவர்களிடம் கே.ஜி. மருத்துவமனை , தாங்கள் அளிக்கப் போகும் சிகிசைகளுக்கான் கையெழுத்தைப் பெற்றுக் கொள்கிறது.

செப்டம்பர் 25 :புதன் கிழமை

அதிகாலை 4:00 மணி: ஸ்ரீமதி இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கிறது.

காலை 7:00 மணி: ஸ்ரீமதி குடும்பத்தாரின் வற்புறுத்தலின் படி, ஸ்ரீமதியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

மாலை 3:00 மணி: பிரேதப் பரிசோதனை முடிந்து ஸ்ரீமதியின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப் படுகிறது. அடக்கம் செய்யப் படுகிறது.

இத்தனை சம்பவங்களையும் தாண்டி நம்மை அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவென்றால், டிஸ் சார்ஜ் சம்மரி எனப்படும் சிகிச்சை தொடர்பான விளக்கங்கள், தரப்பட்ட மருந்துகளின் விவரம் போன்ற அனைத்து விவரங்களையும் சக்தி மருத்துவமனை நிர்வாகம் ஒருவாரம் கழித்து அதாவது அக்டோபர் 1 அன்றுதான் ஸ்ரீமதி குடும்பத்தாரிடம் கொடுத்திருக்கிறது.

தான் சிகிச்சை அளித்த நோயாளியின் அருகிலும் இல்லாமல் கோவை மருத்துவக் கல்லூரியில் பணியில் இருந்து கொண்டும், தனியாக இன்னொரு கிளினிக்கை நடத்தி வந்தும் மேலும் சக்தி நர்சிங் ஹோம் போன்ற தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் செய்தும் வந்த திரு சாரதா என்ற மருத்துவர் ஒருவாரமாக தலை மறைவாக இருக்கிறார்.

கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குறிப்பிட்ட திரு.சாரதா அவர்கள் மேல் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சக்தி நர்சிங் ஹோம் மட்டும் அல்ல, ஏனைய சிறு சிறு மற்றும் நடுத்தர மருத்துவமனைகளுக்கும் கே.ஜி மருத்துவமனைக்கும் இருக்கும் ரகசியக் கூட்டணியை அம்பலப்படுத்துவதும், திரு.சாரதா போன்ற பண ஆசை பிடித்த மருத்துவர்களை தப்புவிக்கும் விதமாக செயல்படும் பெரிய இடத்து லாபியிங்கை முறியடிக்கவும் நம் ஒற்றுமை தேவைப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது ஸ்ரீமதியின் கணவர் ராஜ்குமார் அவர்கள் சட்டரீதியான நடிவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.


Similar posts

Comments are closed.