23 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடக பொலிசின் உயிரைப் பறித்த வீரப்பனின் தோட்டா

Written by vinni   // October 4, 2013   //

karnadaka_police_002ஹோகனேக்கல் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி காவல்துறை அதிகாரி ஒருவர் பெங்களூரில் உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
அவரது உடல் சுகவீனம் அடைய வீரப்பனின் துப்பாக்கியிலிருந்து இவரது உடலுக்குள் பாய்ந்து கடந்த 23 வருடமாக தங்கிப் போய் விட்ட தோட்டாதான் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது பெயர் சந்திரப்பா. உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்த சந்திரப்பாவுக்கு வயது(58). பெங்களூர் யஷ்வந்த்புராவில் உதவி ஆணையராக பணியாற்றி வந்த இவர் 1990ம் ஆண்டு ஏப்ரல் 9ம் திகதி ஹோகனேக்கல் பகுதியில் வீரப்பனும், அவனது கும்பலும் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் நான்கு காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்தனர்.

அதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்களில் ஒருவர்தான் சந்திரப்பா.

ஹோகனேக்கல் அருவிப் பகுதியில் வீரப்பன் கும்பல் நடத்திய அதிரடித் தாக்குதலில், சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெகன்னாத், திணேஷ், ராமலிங்கு, சங்கர் ராவ் ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும் சப் இன்ஸ்பெக்டர்கள் சந்திரப்பா, கிருஷ்ண அர்ஸ், ஸ்பெஷல் பிராஞ்ச் கான்ஸ்டபிள் மல்லண்ணா, டிரைவர் சேஷப்பா, வனக்காவலர் ஆகியோர் குண்டுக் காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதில் சந்திரப்பாவின் வயிற்றிலும், தோள்பட்டையிலுமாக மொத்தம் 5 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. படுகாயம் காரணமாக பல மாதங்களுக்கு பணியில் சேர முடியாத அளவுக்கு அவர் பலவீனப்பட்டுப் போயிருந்தார்.

அவரது உடலில் பாய்ந்த ஐந்து குண்டுகளில் நான்கு குண்டுகளை எடுத்து விட்டனர். ஒரு குண்டு மட்டும் கடைசி வரை எடுக்க முடியாமலேயே போனது.

அந்த ஒற்றைக் குண்டுதான் தற்போது அவரது உடல்நலத்தை பாதித்ததோடு மட்டுமல்லாமல் அவர் உயிரிழப்பிற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


Similar posts

Comments are closed.