சாகச விளையாட்டு வினையானது! கணவர் முன் நேர்ந்த கொடூரம்

Written by vinni   // October 4, 2013   //

thai_woman_002தாய்லாந்தில் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த ஷில்பி அகர்வால்(வயது 36) என்ற பெண், தனது கணவருடன் திருமண நாளை கொண்டாடுவதற்காக தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அங்குள்ள பட்டாயா நகர கடற்கரையில் பாராசெய்லிங் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது ஷில்பி பாராசூட்டில் பறக்க, அந்த பாராசூட்டை விரைவாக சென்ற படகு கயிறு மூலம் இழுத்து சென்றது.

ஆனால் ஒரு கட்டத்தில் பாராசூட்டிலிருந்து ஷில்பி கடலில் விழுந்து விட்டார்.

இவரை மீட்க பின்புறமாக வேகமாக சென்ற படகின் அடியில் உள்ள இறக்கையில் சிக்கி பலியானார். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக படகை ஓட்டியவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது, இதற்காக இவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவரது இறப்புக்கு இழப்பீடாக பாராசெய்லிங் நிறுவனம் 4 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.