இலங்கை கடவுச்சீட்டில் இனி சர்வதேச தரம் வாய்ந்த புகைப்படம்

Written by vinni   // October 4, 2013   //

passport

 அடுத்த வருடத்தில் இருந்து சர்வதேச தரம் வாய்ந்த புகைப்படத் தன்மையுடன் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும்

என இலங்கை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த வருடம் முதல் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தால் அங்கீகாரம் பெற்ற நிலையங்களில் மாத்திரமே கடவுச்சீட்டுக்கு புகைப்படம் எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய புகைப்பட நிலையங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென அவர் கூறினார்.

ஒக்டோபர் 15ம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களைப் பெற முடியும் எனவும் இது குறித்து 0115 731028 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து மேலதிக தகவல் அறிய முடியுமெனவும் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.