அமெரிக்காவில் அரசு அலுவலகங்கள் மூடல் :பாபி ஜிண்டால் கண்டனம்

Written by vinni   // October 4, 2013   //

4-11-2012-18-who-will-be-mitt-romney--39-sஅமெரிக்காவில் உள்ள லூசியான மாகாணத்தின் கவர்னராக அமெரிக்க வாழ் இந்தியரான பாபி ஜிண்டால் (வயது 42) இருந்து வருகிறார். இவர் வரும் 2016-ம் ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, அமெரிக்காவில் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு அதிபர் பராக் ஒபாமா அரசின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு கவர்னர் பாபி ஜிண்டாலும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாபி ஜிண்டால் கூறியதாவது:-

வெள்ளை மாளிகையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். நாடு முழுவதும் உள்ள வாரியத் தலைவர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் தேர்ந்தெடுத்தார்களோ அதை அவர்கள் செய்யவில்லை என்றுதான் எனக்கு படுகிறது.

தற்போது நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகள் மற்றும் கட்டமைப்பு சவால்களில் அதிபர் பராக் ஒபாமாவும், நாட்டின் தேசியத் தலைவர்களும் சரியான தீர்வை காணாவில்லை.

வெள்ளை மாளிகையில் யார் ஆட்சி செலுத்துகிறார்கள். யார் பிரமுகர்களாக இருக்கிறார்கள் என்பதல்ல பிரச்சினை. வெள்ளை மாளிகையில் உள்ளோர்கள் செயலிழந்து போய்விட்டனர் என்பதே பிரச்சினை.

இவ்வாறு அவர் கூறினார்.


Similar posts

Comments are closed.